இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

முதல் முறையாக பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை

திகதி : 2017-07-25

இன்று சபையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை பயன்படுத்தப்பட்டது. “வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம்” இன் மூன்றாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோதே இது பிரயோகத்திற்கு வந்தது.

 

2016 டிசம்பர் 10ஆம் திகதி, 2017 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் பின்னர் இம்முறைமை பரீட்சாத்தம் செய்யப்பட்டது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கங்கள் 42, 43 மற்றும் 44 என்பவற்றின் ஏற்பாடுகளுக்கமைய, பாராளுமன்றத்தின் இக்கூட்டத் தொடரின் போது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை உபயோகித்து பாராளுமன்றத்தில் வாக்களிப்பை மேற்கொள்ள இயலுமென இப்பாராளுமன்றம் 2017 ஜூலை 5ஆம் திகதி தீர்மானித்தது. இது தொடர்பான தேவையான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom