இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற பணியாட்டொகுதியனருக்கான பாராட்டு வைபவம்

திகதி : 2017-07-26

இரண்டரை தசாப்த காலமாக பாராளுமன்றத்திற்கு போற்றுதலுக்குரிய சேவையினை வழங்கிய, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியினரை கௌரவிக்கும் முகமாக இலங்கை பாராளுமன்றத்தினால் பாராட்டு வைபவமொன்று 2017 ஜூலை 24 ஆம் திகதியன்று பத்தரமுல்லை, வோடர்ஸ் எஜ், கிரேன்ட் போல்ரூமில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இவ்வைபவமானது இவ்வகையில் மூன்றாவது வைபவமாவதுடன் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 

இவ்வைபவத்தின் போது, முப்பத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட சேவையினை பூர்த்தி செய்துள்ள பணியாட்டொகுதியின் அங்கத்தவர்கள், இருபத்தைந்து வருட சேவையினை பூர்த்தி செய்துள்ள ஓய்வுபெற்ற பணியாட்டொகுதியின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாட்டொகுதியின் அங்கத்தவர்கள் மற்றும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட விளையாட்டுக்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ள பணியாட்டொகுதியின் அங்கத்தவர்கள் ஆகியோர் பாராட்டுக்குள்ளானனர்.

 

இம்முக்கிய வைபவத்தில் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. நிஹால் செனவிரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.

 

இவ்வைபவத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக்க, பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல, உதவிச் செயலாளர் நாயகம் திருமதி குசானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிக்கிரி ஜயதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

பாராட்டப்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் சார்பாக, முன்னாள் பிரதம ஆராய்ச்சி உத்தியோகத்தர் திரு. டப்ளியு.ஏ.ஜே. குணபால, சிரேஷ்ட எக்ஸ் கதிர் பரிசோதகர் திரு. பீ. லக்‌ஷ்மன் குமார, பிரதி உணவு, பான முகாமையாளர் திரு. ஏ.கே.ஏ.எல். அமரசிங்க, நிருவாக உதவிப் பணிப்பாளர் செல்வி ஜி. தச்சனராணி மற்றும் ஹன்சாட் பிரதிப் பதிப்பாசிரியர் (ஆங்கிலம்) திருமதி சி.என். லொகுகொடிகார த சில்வா ஆகியோர் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன் பாராளுமன்ற சேவையில் அவர்களின் தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். திரு. நிஹால் செனவிரத்ன அவர்கள் உணர்ச்சிமயமான உரையொன்றினை நிகழ்த்தியதுடன் 1981 முதல் 1994 வரை பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரியாக அவரது பெறுமதி வாய்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

 

 1 2

 3 4

 5 6

 7 8

 9 10

 11 12

 13 14

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom