இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற பத்திரிகையாளர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம்

திகதி : 2017-06-29

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையின் கீழ் மற்றும் USAID இன் வலுவூட்டல் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புக் கழக திட்டம் (SDGAP) உடன் இணைந்து, திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் பாராளுமன்றத்தின் பத்திரிகையாளர்களுக்கு முதல் முறையாக 2017 ஜூன் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், நீர்கொழும்பு ஹெரிடன்ஸ் இல் நடைபெற்றதில் 41 ஊடகவியலாளர்கள் பல்வேறு அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்கள் தலைமை தாங்கியதுடன் பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல, உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிக்கிரி ஜயதிலக மற்றும் இலங்கைக்கான USAID இன் ஆளுநர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருவதி டெனிஎல்லி ரீப் ஆகியோருடன் பாராளுமன்ற செயலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

 

இலங்கை பாராளுமன்ற அடிப்படை இயக்க கோட்பாடுகளை உள்ளடக்கிய அமர்வுகள், பாராளுமன்ற பத்திரிகையாளர்களுக்கான சேவைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் பாராளுமன்ற அறிக்கையிடல் போன்றவை பாராளுமன்ற செயலகத்தின் அலுவலர்களினால் நடாத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முடிவில் கலந்துரையாடலான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களின் தேவைகளையும் பரிந்துரைகளையும் பற்றிய தகவலைத் தெரிவிப்பதற்கு கலந்துரையாடும்  அமர்வொன்று நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் ஊடக மையத்தை பலப்படுத்த மற்றும் பாராளுமன்ற குழு அமர்வுகளை பொதுமக்களுக்கு திறக்க சபாநாயகர் எடுத்த முயற்சிகளை அவர்கள் வரவேற்றனர்.

 

 1 2

 3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom