இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சீனத் தூதுக்குழுவின் வருகை

திகதி : 2017-04-18

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் தவிசாளர் அதிமேதகு யு ஜென்செங்க் அவர்களின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் 2017 ஏப்ரல் 06 முதல் 08 வரை இலங்கைக்கு விஜயம் செய்தது.

 

அதிமேதகு யு ஜென்செங்க் அவர்கள் 2017 ஏப்ரல் 07ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்ததுடன் கௌரவ சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற தலைவர்களுடன் இருபக்க சந்திப்பில் ஈடுபட்டார்.

 

இருபக்க சந்திப்பில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து குழுக்களின் பிரதித் தவிசாளம் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பா.உ., உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ., அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம, பா.உ., போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பா.உ., சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரும் காணி அமைச்சருமான கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ., பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ., நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ., விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர, பா.உ., கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ., கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ., பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. டப்ளியு.பி.டி. தஸநாயக்க, பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. டப்ளியு.எம்.என்.பீ. இத்தவல மற்றும் வெளிநாட்டலுவல்கள் செயலாளர் திரு. எசல வீரகோன் ஆகியோரும் சீனாவை பிரதிநிதித்துவம் செய்து துணைத் தலைவியும், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழு மற்றும் தாய்வான் ஜனநாயக சுய அரச லீகின் மத்திய குழுவின் தலைவியுமான கௌரவ (திருமதி) லின் வென்யி, துணைத் தவிசாளர் மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் செயலாளர் நாயகம்கௌரவ தென்ங் கின்ங்லி, நிலையியற் குழு உறுப்பினர் மற்றும் முன்மொழிவுகளை கையாளுகின்ற, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் தவிசாளர் கௌரவ சன் கன், நிலையியற் குழு உறுப்பினர் மற்றும் பயிலல் மற்றும் கலாசார மற்றும் புராதன தரவுக் குழுவின் தவிசாளர் கௌரவ வென்ங் டைஹுஆ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணை அமைச்சர் கௌரவ லியு தென்மின், சீனத் தூதுவர் அதிமேதகு யி எக்ஸிஅன்லிஅங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பமாக இதை இலங்கை மற்றும் சீன பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொண்டதுடன் தற்போதுள்ள இருபக்க உறவுகளை மேலும் வளர்க்கும் நோக்கிலான எதிர்கால உத்திகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

 

பாராளுமன்றத்தின் உபயோகத்திற்காக சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவானது மடிக் கணினிகள் மற்றும் ஒளிப்படக் காட்டிகளை அன்பளிப்புச் செய்ததுடன் இம்மடிக் கணினிகள் பாராளுமன்ற அமர்வுகளுக்கு உறுப்பினர்கள் சமூகமளிக்கும்போது தகவல்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் சபாபீடத்தில் பொருத்தப்படவுள்ளன.

 

 

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom