இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகமாக ஜே.ஆர். ஜயவர்தன நிறுவகத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணக்கரு பத்திரத்தை கையளித்தல்

திகதி : 2017-04-11

ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தை பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்துடன் தற்போது இணைந்து செயற்படும் கொடை நிறுவனமான ப்ரீட்ரிச் நூமன் அமைப்பு (FNF) முன்மொழியப்பட்ட நிறுவகத்தின் எண்ணக்கரு பத்திரம், சட்டமூல வரைவு மற்றும் கட்டடக் கலை எண்ணக்கருக்களை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு 2017 மார்ச் 23 அன்று கையளித்தது.

 

கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் வேண்டுகோளின் பேரில், ப்ரீட்ரிச் நூமன் அமைப்பு (FNF) கருத்திட்டத்திற்கு வசதியளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன் 2016 இல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பிற்குமிடையிலும் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு (MoC) மேலதிகமாக, 2017ஆம் ஆண்டுக்கான ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தமொன்று 2017 மார்ச் 14 அன்று கைச்சாத்திடப்பட்டது.

 

இக்கருத்திட்டம் அதன் பிரதான குறிக்கோளாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஏனைய அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அத்தயவசியமான தகவல் தேவைகளை பூர்த்தி செய்வதையும் ஆராய்ச்சி சான்றுகளை வழங்குவதையும் கொண்டிருக்கின்றது. இணைந்த பல்கலைகழகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய கல்வியியல் தகைமைகளுக்கு இட்டுச் செல்லக்கூடிய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்புடையதான கல்விசார் பாடநெறிகளையும் இந்த நிறுவகம் வழங்கும்.

 

கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரான (பேரா) ஜயதீவா உயன்கொட மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. என். செல்வக்குமரன் ஆகியோர் பாராளுமன்ற செயலகத்துடன் கலந்துரையாடி நிறுவகத்திற்கான எண்ணக்கரு பத்திரம் மற்றும் சட்ட மூல வரைவினை தயாரித்தனர். MICDA அசோசியேட்ஸின் கட்டுமானர்கள் குழுவிற்கு தலைமை வகிக்கும் சிரேஷ்ட கட்டட கலைஞர் திரு. முராட் இஸ்மாஈல் ஆரம்ப எண்ணக்கரு, வடிவமைப்பு மற்றும் நிறுவனத்தின் கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான வரைவினை தயாரித்தார்.

 

பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல, சட்டவாக்க சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ஜகத் கஜவீர ஆராச்சிகே, ப்ரீட்ரிச் நூமன் அமைப்பின் நாட்டுப் பிரதிநிதி திருமதி. சாகரிகா தெல்கொட, ப்ரீட்ரிச் நூமன் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட நிறைவேற்றுநர் திரு. வித்யா அபயகுணவர்தன, திரு. என். செல்வகுமரன் மற்றும் திரு. முராட் இஸ்மாஈல் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

1

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom