இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்பு சபை - செய்திப் பிரசுரம்

திகதி : 2017-04-05

வழிப்படுத்தும் குழுவின் செயன்முறைகள் பற்றி பல செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் வழிப்படுத்தும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் யாதெனில், இன்று (05 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2017) தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்த முக்கிய செய்திகள், புதிய அரசியலமைப்புக்கான எவ்விதமான அவசியமும் இல்லை எனவும் திருத்தங்கள் மட்டுமே போதுமானது எனவும் குறிப்பிட்டு இவையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது என கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் கூறியதாக மேற்கோள் காட்டி பல செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாராளுமன்றத்தின் சபையில் நடைபெற்ற அமர்வில் பங்குபற்றியிருந்ததன் காரணமாக நேற்று (04 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2017) நடைபெற்ற வழிப்படுத்தும் குழுவின் அமர்வுக் கூட்டத்தில் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பங்குபற்றியிருக்கவில்லை. அதற்கும் மேலாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருப்பதாக வெளியிட்ட செய்தி பொய்யான செய்தி என்பதுடன் இன்று நடைபெற்ற வழிப்படுத்தும் குழுவின் கூட்டத்தொடரில் இவ் விடயம் தொடர்பில் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

நடைபெறும் செயற்பாடுகளை குழப்பும் வகையில் இவ்வாறான பொய் செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றன என்பதனை வழிப்படுத்தும் குழு கருத்திற்கொண்டது. அத்துடன் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை விரைவில் உறுதி செய்யப்பட்டு இது தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று வழிப்படுத்தும் குழு தீர்மானித்துள்ளது.

 

திரு. நீல் இத்தவெல

வழிப்படுத்தும் குழுவின் செயலாளரும்,
பணியாளர் தொகுதி பிரதானியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom