இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

‘சபாநாயகரின் வகிபாகம் மற்றும் அலுவலகம்’ தொடர்பான வட்ட மேசை கலந்துரையாடல்

திகதி : 2017-02-27

‘சபாநாயகரின் வகிபாகம் மற்றும் அலுவலகம்’ தொடர்பான வட்ட மேசை கலந்துரையாடலொன்று தவிசாளர் குழாமிலுள்ள உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட அலுவலர்கள் ஆகியோரின் கலந்துகொள்ளலுடன் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்புடன் (Westminster Foundation for Democracy) இணைந்து இலங்கை பாராளுமன்றமானது 2017 பெப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் நீர்கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தது.

 

தவிசாளர் குழாமிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருத்தமான நிலையியற் கட்டளைகள் மற்றும் தலைமை தாங்கும் உறுப்பினர்கள் தொடர்பான வழக்கங்கள் மற்றும் ஏனைய பாராளுமன்றங்கள் இவ்வாறான ஒத்த சவால்களையும் வாய்ப்புகளையும் எவ்வாறு அணுகுகின்றது என்பதை விளங்குதல் போன்ற துறைகளில் அறவினை விருத்தி செய்வதே இதன் பிரதான குறிக்கோளாகும். ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு மற்றும் அலுவலர்கள் ஐக்கிய இராச்சிய அனுபவங்கள் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பாணியிலுள்ள பாராளுமன்றங்களில் தலைமை தாங்கும் உறுப்பினர்களின் பங்கு பற்றிய நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் உதவியது.

 

உறுப்பினர்களிடையே, அலுவலர்களிடையே மற்றும் பாராளுமன்றங்களிடையே அறிவைப் பகிர்வதிலான பரிமாற்றங்களின் முக்கியத்துவம், அறிவை விருத்தி செய்தல் மற்றும் உறவை வளர்த்தல் தொடர்பாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் குறித்துரைத்தார்.

 

ஆரம்ப நிகழ்விற்கு கௌரவ சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், கௌரவ முன்னாள் சபாநாயகர், தவிசாளர் குழாமிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். 2011-2016 பிரபுக்கள் சபையின் சபாநாயகர் பிரான்ஸஸ் டி’சூசா, பொதுமக்கள் சபையின் தவிசாளர் குழாமிலுள்ள முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் சேர் நிகொலஸ் வின்டர்டன், சபை செயலாளர் கிரிஸ்பின் பொய்ஸர், மற்றும் பிரபுக்கள் சபையின் சபாநாயகர் ஆலோசகர் ரொபின் ரெம்ஸே ஆகியோர் ஐக்கிய இராச்சிய தூதுக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

 

இலங்கை பாராளுமன்றத்துடன் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பின் தற்போதைய இணைப்பின் மூலம் வழங்கும் உதவியின பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்கள் நினைவூட்டினார்.

 

1 2

34

56

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom