இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரச நிறுவனங்களில் நிதி மற்றும் பௌதீக செயலாற்றுகைகளுடன் தொடர்புபட்ட தகவல்களை நிகழ்நிலையாக பெற்றுக்கொள்ளல் பற்றிய பயிற்சி நிகழ்ச்சி

திகதி : 2017-01-17

பாராளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் 2017 ஜனவரி 09,10 மற்றும் 11 ஆகிய தினங்களில் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அலுவலர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சி நிகழ்ச்சியின் குறிக்கோளாவது, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பரிசீலனைக்கு உட்படுகின்ற அனைத்து அரச மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் தகவல்களையும் நிகழ்நிலையாக பெற்றுக் கொள்வதாகும்.

 

கணனி செயற்றிட்ட வரைவுக்கு தரவுகளை உட்செலுத்துகின்ற அலுவலர்களுக்கு இதன் மூலம் ஆரம்ப பயிற்சியொன்று வழங்கப்பட்டதுடன் இந்த செயல்முறையை பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு என்பன ஒருங்கிணைத்தன.

 

1 2

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom