இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

முன்னாள் பிரதம அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல், அரச மரியாதைக்காக பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு

திகதி : 2016-12-28

முன்னாள் பிரதம அமைச்சர், காலஞ்சென்ற கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல், அரச மரியாதைக்காக இன்று (டிசம்பர் 28) பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு கொண்டுவரப்பட்டது. பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் ஒன்றுகூடல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு கௌரவ சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாராளுமன்ற செயலக பணியாளர்களினால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

திரு. விக்கிரமநாயக்க அவர்கள், 36 வருடத்திற்கு மேற்பட்ட பாராளுமன்ற சேவைக் காலத்திற்கு உரிமை கோருகின்ற ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாவார். 1960ஆம் ஆண்டு ஹொரண ஆசனத்தை பிரதிநிதித்துவம் செய்து முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு (சனப் பிரதிநிதிகள் சபை) தெரிவு செய்யப்பட்ட அன்னார் அதன் பிற்பாடு தனது அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை வகித்துள்ளார். பிரதம அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக, பாதுகாப்பு, புத்தசாசன, பொது நிருவாகம், பெருந்தோட்டக் கைத்தொழில் போன்ற முக்கியமான அமைச்சுப் பதவிகள் பல அவர்களினால் வகிக்கப்பட்டுள்ளன. 1994 ஆகஸ்ட் முதல் 2000 ஒக்டோபர் வரை பாராளுமன்ற சபை முதல்வர் பதவியையும், 2001 டிசம்பர் முதல் 2002 ஜனவரி வரை குறுகிய காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்துள்ளார். அன்னார் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விதுற விக்கிரமநாயக்க அவர்களின் தந்தையும் ஆவார்.

 

திரு. விக்கிரமநாயக்க அவர்களின் இறுதிச் சடங்கு பூரண அரச அனுசரணையுடன் 2016 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

 

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom