இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

திகதி : 2016-12-10

கௌரவ சபாநாயகர் அவர்களினால் “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை” யின் இறுதிப் பிரதியானது சபாபீடத்தில் விடப்பட்டதுடன் சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் நோக்கமானது பாராளுமன்றத்துக்கு, அவர்களின் தேர்தல் தொகுதி மற்றும் பொதுமக்களுக்கான தமது பொறுப்புடைமைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அவர்கள் தமது தத்துவங்களையும் பணிகளையும் மற்றும் கடமைகளையும் தங்களால் பிரயோகித்தல், புரிதல் மற்றும் நிறைவேற்றுவதல் என்பவற்றுக்கு உதவுவதற்காகும். பதிமூன்று பகுதிகளாக விளக்கப்பட்டுள்ள இது மற்றவர்களுடன் உறுப்பினர்களின் பொறுப்புகள், நடத்தை விதிகள், நடத்தை, விசாரணை, தண்டனைகளுக்கான நடபடிமுறை மற்றும் இதரவற்றை உள்ளடக்கியுள்ளது.

 

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கருத்துரைகளையும் முன்மொழிவுகளையும் கருத்திற் கொண்டு சட்ட வரைஞரின் உதவியினைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.

 

பதிவிறக்குக

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom