இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற கூட்டத்தொடரினை நிறுத்துதல்

அரசியலமைப்பின் 70 (1) ஆம் உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதி காலத்திற்கு காலம் பாராளுமன்ற கூட்டத்தொடரினை நிறுத்தமுடியும். பாராளுமன்ற கூட்டத்தொடரினை நிறுத்தும் காலப்பகுதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத ஒரு காலப்பகுதியில் பாராளுமன்றத்தைக் கூடுமாறு ஜனாதியினது பிரகடனத்தின் மூலம் அழைப்பு விடப்படும்.

 

எனினும், பாராளுமன்ற அமர்வுக்கென நிர்ணயிக்கப்பட்டதேதிக்கு முந்திய ஒரு தேதியிதிலிருந்தோ அல்லது இத்தேதியானது அத்தகைய பிரகடனத் தேதியிலிருந்து மூன்றுநாட்களுக்கு குறைந்த ஒரு தேதியாக இருக்காதகவாறு பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம். பாராளுமன்றம் முன்கூட்டியே பிரகடனம் செய்யப்படும்போது, புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட திகதிக்கு பிரகடனம் செய்யபட வேண்டும்.

 

அரசியலமைப்பின் 70 (4) பிரிவின்படி : “ பாராளுமன்றத்தின் முன்னர் உரிய முறையில் கொண்டுவரப்பட்டுள்ளவையும் பாராளுன்றத்தின் அமர்வு நிறுத்தப்பட்ட நேரத்தில் முடிவுசெய்யப்படாதவையுமான எல்லாக் கருமங்களும் அடுத்த அமர்வின்போது விட்டநிலையிலிருந்து தொடர்ந்து கையாளப்படலாம்.

 

பாராளுமன்ற அமர்வு நிறுத்தப்பட்டுள்ள போதும் சபாநாயகர் தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருப்பார், பாராளுமன்ற அமர்வுகள் இடம்பொறாதபோதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்கள் பதவியினைத் தக்கவைத்துக்கொள்வர்.

 

பாராளுமன்ற கூட்டத் தொடரினை நிறுத்துவதன் விளைவாக அரசியல் குற்றச்சாட்டினைத்தவிர ஏனையவை பாராளுமன்ற அனைத்து அன்றைய தின அலுவல்களையும் அந்த நேரத்தில் நிலுவையிலுள்ள அனைத்து அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

 

அதே அமர்வுக்கு ஒரு சட்டமூலம் , ஒத்திவைப்பு பிரேரணை அல்லது கேள்விகளை ஒரே அமர்வின் போது இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்த முடியாது. இருப்பினும், பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான அழைப்பின் பின்னரான அடுத்தடுத்த அமர்வுக்கு அறிமுகப்படுத்தப்படலாம்.

 

ஒரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறுத்தப்படுகின்றபோது நிலுவையிலுள்ள பாராளுமன்ற அலுவல்கள் முடிவுறுத்தப்படுவதில்லை. எனவே, புதிய அமர்வு துவங்கப்பட்ட பின்னர், நிலுவையிலுள்ள அலுவல்களைத் தொடரலாம்.

 

ஒரு புதிய அமர்வின் தொடக்கத்தில் தெரிவுக் குழு மறுசீரமைக்கப்பட வேண்டும். உயர் பதவிகளின் குழு பாராளுமன்ற கூட்டத்தொடர் அழைக்கப்படும்போது தொடர்ந்து செயல்படத் தொடங்கும். மற்றைய அனைத்துக் குழுக்களும் குறித்த கால இடைவேளையின் போது செயல்படத் தொடங்கி ஒவ்வொரு புதிய அமர்வு ஆரம்பத்திலும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

 

ஒரு கூட்டத்தொடர் முடிவின்பின்னர் புதிய அமர்வு தொடங்குகின்றபொழுது அதனை ஜனாதிபதி சம்ரதாய பூர்வமாக ஆரம்பித்துவைப்பார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்குவதற்கும் மற்றும் தலைமை தாங்குவதற்கும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்கும் அவர் அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் அளிக்கப்படுகிறார்.

 

பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் கடந்த காலத்ததில் பதினைந்து தடவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பதிவுகள் வெளிப்படுத்துகிறது. 1958 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 27 ஆம் திகதி இனவாத வன்முறை வெடித்தனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தினை அழைத்த ஆளுநர் ஜெனரல் சேர் ஒலிவர் குணதிலக அவர்கள் அவசரகாலச் சட்டத்தினைப் பிரகடனம் செய்து பாராளுமன்றத் கூட்டத்தொடரினை நிறுத்தினார். அதன்படி பாராளுமன்றம் ஆனி மாதம் 1958 இல் கூடியது. இது ஒரு தனிப்பட்ட சூழ்நிலையாகும்.

 

 

கொள்கை பிரகடனம்

கடந்த காலத்தில், ஆளுநர்-ஜெனரால் அவர்களினால் வழங்கப்பட்ட அக்கிராசன பிரகடனத்தின் மூலமாக புதிய பாராளுமன்ற கூட்டதொடரின் முதலாவது அமர்வின் தொடக்கத்தில் அரசின் கொள்கை பிரகடம் ஒன்றைச் செய்யவதற்கு ஜனாதிபதி தகுதி பெற்றுள்ளார்.

 

1960 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ம் திகதி திரு. டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது.

 

ஆளுநர் ஜெனரல் சேர் ஒலிவர் குணதிலக அவர்கள் 1960 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி கொள்கைபிரகடனத்தினை வாசித்தார். எதிர்க்கட்சிகள் சார்பாக 86 வாக்குகள் அரசுக்கு எதிராகவும் 61 வாக்குகள் அரசுக்கு சார்பாகவும் மற்றும் 6 உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்ட புதிய கொள்கைப்பிரகடனம் மீதான இரண்டாம் நிலை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிக்கு சார்பாக 93 வாக்குகளும் அரசுக்குசார்பாக 61 வாக்குகளும் ஒரு பிரதிநிதி வாக்களிப்பில் பங்குகொள்ளாது காணப்பட அரச கொள்கை பிரகடனத்தின் மூலப்பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

எனினும், தற்போது கொள்கை பிரகடன அறிக்கைகள் விவாதிக்கப்படவோ அல்லது வாக்களிக்கவோ வைக்கப்படவில்லை.

 

 

 


 

 

 

எர்ஸ்கின் மே

புகழ்பெற்ற பிரிட்டிஷ் அரசியலமைப்பு தத்துவவாதி எர்ஸ்கின் மே தனது “பாராளுமன்ற நடைமுறையில்” இவ்வாறு குறிப்பிடுகிறார்: பாராளுமன்றத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடசினை நிறுத்துவது என்பது அரசின் தனித்துவமான செயல் ஆகும். மகாராணியினால் குறித்தொதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பாராளுமன்றம் தொடங்குகிறது. அவருடைய விருப்பத்தைவிட நீண்ட காலமாக அதனைத் தொடர முடியாது.

 

ஆனால் ஒவ்வொரு சபையும் ஒத்திவைக்க தனியான அதிகாரத்தினைக்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒத்திவைக்கப்படும் காலவரையறயானது ஒத்திவைப்பு தீர்மானத்தின் மூலம் வரையறுக்கப்படுகின்றது.

 

எர்ஸ்கின் மே 24 ஆம் பதிப்பு மேலும் குறிப்பிடுவதாவது: "பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறுத்தப்பட்டுள்ளபோது, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, அனைத்து அலுவல்களும் இடைநிறுத்த வேண்டும்”.

 

சமீப காலம் வரை, அனைத்து அலுவல்களும் நிலுவையில் இருந்தன, ஆனால் பதவிநீக்க விசாரணைதவிர ஏனையவையாகும் அதாவது தனிநபர் சட்டமூலம்கள் போன்றவை.

 

 

மகாராணியின் பேச்சு (ஐக்கிய இராச்சியம்)

ஒரு அமர்வுவின் முதல் நாளில் மகாராணியின் பேச்சு இடம்பெறுகின்றது. மகாராணி பேச்சு இடம்பெறுகின்றபொழுது இரண்டு சபைகளிலும் நன்றிதெரிவிக்கும் பிரேரணை எடுத்துக்கொள்ளப்டும்.

 

 

ஜனாதிபதியின் உரை (இந்தியா)

ஜனாதிபதியின் அரச உரையானது அரசினது கொள்கை அறிக்கையாகும், மேலும், அதன் உள்ளடக்கங்களுக்கு பொறுப்பா அரசாங்கத்தால் வரைவு செய்யப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் 86 (1) பிரிவின் கீழ் காணப்படுகின்றது.

 

சபையின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய சபாநாயகர், ஜனாதிபதியின் உரையில் குறிப்பிடப்பட்ட விடையங்களை விவாதிக்க நேரத்தை ஒதுக்குகிறார்.

 

ஒரு உறுப்பினரினால் ஒத்திவைப்பு கொண்டுவரப்பட பிரதம மந்திரியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு உறுப்பினர் இரண்டாவதாக வழிமொழிவார்.

 

விவாதத்தின் நோக்கம் மிகவும் பரந்ததாகும். அனைத்து விடையங்களும் நன்றியுணர்வுடன் திருத்தங்கள் மூலம் கலந்துரையாடலில் கொண்டு வரப்படுகின்றன. இறுதியில், பிரதம மந்திரி அவர்கன் ஜனாதிபதியினுடைய விவாதத்திற்கு பதிலளித்தது நன்றி தெரிவிப்பார். பிரதம மந்திரி பதிலளித்தபின், அரசின் கொள்கையறிக்கையானது மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு திருத்தங்கள் திருத்தங்கள் செய்யப்படும்.

 

பின்னர், அது ஒரு கடிதத்தின் மூலம் சபாநாயகரால் நேரடியாக ஜனாதிபதிக்கு திருத்தப்பட்ட பிரேரணையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

 

சபாநாயகரிடம் இருந்தான ஒரு பிரேரணையினை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதியி அவர்கள் தனது செய்தியை சபாநாயகர் அவர்களுக்கு அனுப்பிவைக்க அதனைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் அவர்கள் சபையின் ஜனாதிபதியின் செய்தியை அதை சபையில் வாசிப்பார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-05-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom