இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிலையியற் கட்டளை 48

1.

ஒரு தனியார் அமைப்பினைக் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் தொடர்பான விடயத்திலே 48ஆம் நிலையியற் கட்டளையின் கீழ் சட்டமூலத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உத்தேச வரைவுச் சட்டமூலத்தை 48(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செய்திப் பத்திரிகை மற்றும் வர்த்தமானி என்பனவற்றில் பிரசுரித்த விளம்பரங்களின் மும்மொழியிலான பிரதிகளுடன் செயலாளர் நாயகத்திடம் கையளித்தல் வேண்டும்.

   
2.

மேலே குறிப்பிட்டவாறாக விளம்பரம் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து ஒரு மாதம் கழிந்ததன் பின் சட்டமூலமானது 47(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒரு வர்த்தமானியாக மூன்று மொழிகளிலும் அச்சிடப்படுகின்றது.

   
3.

வர்த்தமானி வெளியிடப்பட்டதிலிருந்து பதினான்கு நாட்கள் கழிந்ததன் பின், 47(4)ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலமானது முதலாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படுகின்றது.

   
4.

முதலாம் மதிப்பீட்டின் பின்பும் சட்டமூலம் அச்சிடப்படுவதற்குக் கட்டளையிடப்பட்டதன் பின்பும் சட்டமூலத்திற்கு ஓர் இலக்கம் வழங்கப்பட்டு அச்சிடப்பட்டு 47(5)ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிக்கையிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது.

   
5.

அமைச்சரின் அறிக்கையானது அரசியலமைப்பின் உறுப்புரை 77 இற்கு அமைய சட்ட மாஅதிபரின் குறிப்புரைகளுடனும் அமைச்சரவை அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்திற்குக் கிடைக்கப் பெற்றதன் பின்பு சட்டமூலமானது ஓர் அறிக்கை வடிவிலே அச்சிடப்பட்டுப் பாராளுமன்றத்தின் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படும்.

   
6.

அமைச்சர் ஆறு மாதங்களினுள் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடாவிட்டால், சட்டமூலமானது 47(6)ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், அதற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுவதற்காக ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படுகின்றது.

   
7.

அமைச்சரின் அறிக்கையானது பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமூலத்தின் மீது இரண்டாம் மதிப்பீடு நடத்தப்பட்டதன் பின் சட்டமூலமானது ஒரு நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது.

   
8.

நிலையியற் குழுவின் நடவடிக்கைகள் 116 முதல் 120 வரையிலான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடத்தப்படுகின்றன. நிலையியற் குழுவின் அறிக்கையானது பாராளுமன்றத்திற்கு 63 மற்றும் 65 ஆம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

   
9.

நிலையியற் குழுவின் அறிக்கையானது 67(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பரிசீலிக்கப்பட்டுப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்படுகின்றது

   
10.

சட்டமூலமானது பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டதன் பின்பு 67 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலத்தின் மீது மூன்றாம் மதிப்பீடு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது.

   
11.

மூன்றாம் மதிப்பீட்டின் பின், 68 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செய்யப்படுகின்ற முன்னறிவித்தலுக்கிணங்க, வார்த்தைகள் அல்லது வரைவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட திருத்தங்களை அதில் செய்யலாமென்பதோடு 69 ஆம் இலக்க நிலையியற் கட்டளையினதும் அரசியலமைப்பின் 79 மற்றும் 80 ஆம் உறுப்புரைகளினதும் கீழ் சபாநாயகரின் சான்றுரைக்காக சமர்ப்பிக்கப்படும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-04-29 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom