இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்

நிலையியற் கட்டளை 47
1. 47 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமொன்று கிடைக்கும்பொழுது, சட்டமூல அலுவலகமானது அதனை மூன்று மொழிகளிலும் ஒத்துப் பார்த்து, 47(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் வர்த்தமானியில் அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

2. வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பதினான்கு நாட்களுக்குப் பின்பு சட்டமூல அலுவலகமானது, 47(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம், முதலாம் மதிப்பீட்டின் நிமித்தம் ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறச் செய்விக்கும்.

3. முதலாம் மதிப்பீட்டின் பின்பு குறிப்பிட்ட சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை வழங்கப்படும் பட்சத்தில், சட்டமூல அலுவலகமானது அச்சட்டமூலத்திற்கு ஓர் இலக்கத்தினை வழங்கி, அதனை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் 47(5) நிலையியற் கட்டளையின் பிரகாரம் அறிக்கையிடும் பொருட்டுப் பொருத்தமான அமைச்சருக்கும் அனுப்பி வைக்கும்.

4. அமைச்சரின் அறிக்கை பாராளுமன்றத்திற்குக் கிடைத்ததன் பின்பு, சட்டமூல அலுவலகமானது மூன்று மொழிகளிலும் அதனை ஒத்துப் பார்த்து அச்சிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்.

5. அமைச்சரின் அறிக்கை ஆறு மாதத்திற்குள் கிடைக்காதவிடத்து, சட்டமூல அலுவலகமானது, 47(6) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், அதற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுவதற்காக அச்சட்டமூலம் ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

 

நிலையியற் கட்டளை 48
1. 48 ஆம் நிலையியற் கட்டளையின் கீழ் ஒரு சட்டமூலம் அமையுமாயின் அச்சட்டமூலத்திற்குப் பொறுப்பான உறுப்பினர், உத்தேசச் சட்டமூலத்தின் வரைவை 48(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மும்மொழிகளிலும் பத்திரிகை, வர்த்தமானி ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களின் பிரதிகளுடன் இணைத்துப் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்க வேண்டும்.

2. மேற்குறிப்பிட்டவாறு விளம்பரம் வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு மாதம் கடந்த பின்பு, 47(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், அச்சட்டமூலத்தை வர்த்தமானியில் மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கான நடவடிக்கைகளைச் சட்டமூல அலுவலகம் மேற்கொள்ளும்.

3.

வர்த்தமானி வெளியிடப்பட்டதிலிருந்து பதினான்கு நாட்கள் கடந்த பின்பு, 47(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலத்தை முதலாம் மதிப்பீட்டிற்கென ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவிப்பதற்கான நடவடிக்கைகளைச் சட்டமூல அலுவலகம் மேற்கொள்ளும்.

4. முதலாம் மதிப்பீட்டின் பின்பு சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை வழங்கப்படும் பட்சத்தில், சட்டமூல அலுவலகமானது, அச்சட்டமூலத்திற்கு ஓர் இலக்கத்தை வழங்கி, அதனை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதனை 47(5) நிலையியற் கட்டளையின் பிரகாரம் அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டுப் பொருத்தமான அமைச்சருக்கும் அனுப்பி வைக்கும்.

5. அமைச்சரின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு கிடைத்ததன் பின்பு சட்டமூல அலுவலகமானது அதனை மூன்று மொழிகளிலும் ஒத்துப் பார்த்து அச்சிடுவதற்கும் பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

6. அமைச்சரின் அறிக்கை ஆறு மாதத்திற்குள் கிடைக்காதவிடத்து, 47(6) நிலையியற் கட்டளையின் பிரகாரம், சட்டமூல அலுவலகமானது அச்சட்டமூலம் அதற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுவதற்காக ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

7. அமைச்சரின் அறிக்கை பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பும் சட்டமூலமானது இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்பும் அது நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும். (நிலையியற் குழுவின் நடைமுறைகளுக்குத் தயவுசெய்து 3 ஆம் பந்தியைப் பார்க்கவும்.)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-04-28 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom