ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2017-01-16 |
2017, ஜனவரி 09 மற்றும் 24ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2017 ஜனவரி 24 செவ்வாய்க்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 10.30 - பி.ப. 07.30 | 2016.10.28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
2017 ஜனவரி 25 புதன்கிழமை |
|
பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) ஏற்றுமதிகள் இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயம் 2017.01.09 ஆம் திகதிய 139ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன விடயம் 2017.01.09 ஆம் திகதிய 139ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளை (மேற்சொன்ன இரு கட்டளைகளும் 2016.10.03 மற்றும் 2016.11.10 ஆம் திகதிகளிலான முறையே 1987/8 மற்றும் 1992/30 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2017.01.09 அன்று வெளியிடப்பட்ட 5(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (iv) காணி (பாராதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன கட்டளை 2016.11.08 ஆம் திகதிய 1992/10 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.09 அன்று வெளியிடப்பட்ட 5(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2017 ஜனவரி 26 வியாழக்கிழமை |
|
மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 06.30 | மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2017.01.09 ஆம் திகதிய 139ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2017 ஜனவரி 27 வெள்ளிக்கிழமை |
|
மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 06.30 | பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த கௌரவ எம்.எச்.மொஹமட் அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை |
பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |