இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்

பாராளுமன்றத்தை முகாமைத்துவம் செய்வதில் நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம் பிரதான வகிபாகமொன்றை வகிக்கின்றது. நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களத்தின் தலைவராக பணிப்பாளர் (நிதி) இருக்கின்றார். கணக்கீட்டு அதிகாரி என்ற வகையில், அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு நிதி விடயங்கள் தொடர்பாக நேரடியாக ஆலோசனை வழங்குவதற்கும் அறிக்கையிடுவதற்குமான பொறுப்பைக் கொண்டுள்ளார்.

‘நிதி, கணக்குகள்’ மற்றும் ‘வழங்கல்கள், சேவைகள்’ ஆகிய அலுவலகங்கள் இரண்டு உதவிப் பணிப்பாளர்களின் தலைமையில் இருக்கின்ற அதேவேளை, ‘உணவு வழங்கல் - கணக்குகள்’ அலுவலகம் ஒரு கணக்காளரின் தலைமையில் உள்ளது.

பணிப்பாளரின் (நிதி) ஆளுகையின் கீழ் வரும் பிரதான பணிகளாவன: கணக்கீட்டு அலுவலர் என்ற வகையில் தமது பொதுவான பொறுப்புக்களை நிறைவேற்றுதல் மற்றும் அரசாங்க நிதிப் பிரமாணங்கள், சட்டவாக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நிதிகள் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான கணக்குத் தணிக்கைத் தொழிற்பாடுகளை வழங்குதல் என்பனவாகும்.

இதன் உள்ளடக்கம் –

(அ) வரவு செலவுத் திட்டம் தயாரித்தல், நிதிசார் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல் மற்றும் நிதிசார் கண்காணிப்பு, நிதிசார் அறிக்கைகளைத் தயாரித்தல், பயனுறுதியான கணக்கீட்டு முறையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துதல், சம்பளப் பதிவேட்டு முறையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் செம்மையான உள்ளக நிதிசார் கட்டுப்பாட்டைப் பேணுதல் என்பனவாகும்.

(ஆ) நிதி மற்றும் வழங்கல் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு மனித வளங்கள் வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக, மூன்று பிரிவுகளையும் சேர்ந்த பணியாட்டொகுதியினருக்கு தலைமைத்துவம் மற்றும் நெறிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கல்.

 

தொடர்பு கொள்க
   
கே.ஜி.எம். ஜயசாந்த
merwin_j@parliament.lk
பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom