இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க நிதி பற்றிய குழு

அரசாங்க நிதி பற்றிய குழு

 அரசாங்க நிதி பற்றிய குழு

(அ)      அரசியலமைப்பின்148 ஆம் உறுப்புரையின் கீழ் வருமானங்களைச் சேகரிப்பதற்கும்;

(ஆ)     அரசியலமைப்பின் 149(1) ஆம் உறுப்புரையின் கீழ் திரட்டிய நிதியத்தின் மூலம் கொடுப்பனவுகளைச் செய்வதற்கும்;

(இ)      அரசியலமைப்பின்  149(1) ஆம் உறுப்புரையின் கீழ் குறித்துரைக்கப்பட்ட சட்ட ரீதியான தேவைப்பாடுகளுக்காக அரசாங்க நிதியத்தைப் பயன்படுத்துவதற்கும்

(ஈ)       அரசியலமைப்பின்  150(1) மற்றும் 150(2) ஆம் உறுப்புரைகளின் கீழ் அரசாங்க  நிதியத்தைப் பயன்படுத்துவதற்கும்;

(உ)      நடப்பாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒதுக்கீட்டு மந்தநிலை, ஒதுக்கீட்டு மாற்றங்கள் மற்றும் எதிர்பாரா மீதிகளுக்கும்;

(ஊ)     நடப்பாண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும்;

(எ)       அரசாங்கத்தின் கடன் மற்றும் கடன் சேவைகளும்;

(ஏ)       2003ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கத்தைக் கொண்ட அரசாங்க நிதி முகாமைத்துவ(பொறுப்புக்கள்) சட்டத்தின் கீழ் அறிக்கைகளும் வெளியீடுகளும்.

பரிசீலிப்பது குழுவின் பணியாக இருத்தல் வேண்டும்.குழுவினால் அவ்வப்பொழுது 2 ஆவது பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களில்  எழுகின்ற விடயங்களை பாராளுமன்றத்திற்கு  அறிக்கையிடல் வேண்டும்;

குழுவினால் சட்டமூலம் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தை சபைக்குச் சமர்ப்பிப்பித்து 6 மாதத்திற்குள் அரசாங்கக்கொள்கையின் வரையறைக்குள் நிதி முறையாகசெலவு செய்யப்பட்டுள்ளதாவென உள்ளடக்கிய மதிப்பீடு பற்றிய அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கு பின் 4 நாட்களுக்குள் குழுவினால் மொத்த மதிப்பிடப்பட்ட செலவுகள் மற்றும் பெறுகைகளை பெற்றுக் கொண்ட அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட அரச நிதி, நிதி மற்றும் பொருளாதார ஊகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

 (அ)  அதனது நடப்பெண்காணப்படுவதற்கும்;

(ஆ)  ஆட்கள் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளைக் கோருதல், பாராளுமன்றத்தின் முன் அல்லது குறித்த குழுவின் முன் தோன்றி தனது உடைமையில் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் கடிதங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு எந்தவொரு ஆளுக்கும் பணிப்பு விடுப்பதற்கும்;

(இ)   குழுவின் தலைவர் அல்லது உரிய நோக்கத்திற்காக குறித்துரைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் சாட்சிகாரர்களை வாய்மூலம் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கும் அல்லது வேறு விதத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் சத்தியம் அல்லது உறுதியுரையின் மீது சாட்சியங்களை விசாரிப்பதற்கும்;

(உ)   குழுவுக்கு  ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டு உரிய துறையில் நிபுணத் துவத்தைக் கொண்ட மற்றும் தேர்ச்சி உள்ளவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும்; அத்துடன்

(உ)   அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளைத் தயாரித்து பாராளுமன்ற ஒத்திவைப்புக்களைக் கவனத்திற் கொள்ளாது கூடுவதற்கும் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

அதனது முதலாவது கூட்டத்தை நடாத்தும் தினம் தொடக்கம் ஒரு வருட காலத்திற்குள் அல்லது பாராளுமன்றத்தினால் வழங்கக்கூடிய வேறு மேலதிக காலப் பகுதிக்குள் குழுவினால் அதனது அறிக்கையை வழங்குதல் வேண்டும்.

 

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom