இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை

திகதி : 2018-10-11

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை 2018 ஒக்டோபர் 12 முதல் 14 வரையான மூன்று நாட்களிலும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டறையை ஏற்பாடு செய்வது 2013 நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் தெரிகுழு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (Inter Parliamentary Union) ஆகியனவாகும்.

 

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் சுய மதிப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் இந்நாட்டு பாராளுமன்றம் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் மூலம் பின்வரும் குறிக்கோள்களை அடைந்து கொள்வதே இந்த பட்டறையின் நோக்கமாகும்.

  • நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைவதற்கு தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
  • நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை எய்துவதற்கு மேலதிக உத்திகள், வழிமுறைகள் மற்றும் ஒத்துழைப்புகளை அடையாளம் காணல்.

 

இப்பட்டறையின் ஆரம்ப வைபவம் ஒக்டோபர் 12ஆம் திகதி பி.ப. 4.45 மணிக்கு கொழும்பு ஹில்டன் “த புளூ” இல் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கௌரவ உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், தனியார் துறை அதிகாரிகள், அரச சார்பற்ற மற்றும் இளைஞர் மன்றங்களின் பிரதிநிதிகளின் கலந்து கொள்ளலுடன் நடைபெறவுள்ளது.

 

இதற்கான வசதிகளை வழங்குவது நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான பாராளுமன்ற தெரிகுழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலங்க சுமதிபால, நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளுக்கான ஆலோசகர் மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஹயிட், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அலெக்ஸ் ரீட் (அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஆலோசகர்), பாராளுமன்ற உதவிச் செயலாளர் (சட்டவாக்க சேவைகள்) திரு. டிகிரி ஜயதிலக, பாராளுமன்ற உதவிச் செயலாளர் (நிருவாக சேவைகள்) திரு. குசானி ரோஹணதீர, இலங்கை மற்றும் மாலைதீவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் திரு. கித்சிறி விஜேவீர, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கொள்கை நிபுணர்களான திருவதி. சொனாலி தயாரத்ன (ஆட்சி மற்றும் நல்லிணக்கம்), திருவதி. தருகா திசாநாயக்க (சுற்றாடல்), சுற்றாடல் பராமரிப்பு மற்றம் இடர் முகாமைத்துவ ஆலோசகர் திருவதி. விசாகா ஹிடல்லகே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom