இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றவிசேட குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு

திகதி : 2018-09-25

இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றவிசேட குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு கௌரவ சபாநாயகரின் தலைமையில் அதிசங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள், துணை மகாநாயக்க தேரர்கள்மற்றும் அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த அதி வணக்கத்திற்குரிய மதகுருமார்கள், பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளையும் பிதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரமுகர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆதிவாசி மக்களுக்கான தலைவர்களின் பங்கேற்புடன் 2018 அக்டோபர் மாதம் 01 ஆந் திகதி, திங்கட்கிழமை மு.ப. 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை அம்பாறை மொன்டி ஹோட்டலில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

“தேசிய மற்றும் சமய சகவாழ்வின் ஊடாக இலங்கையின் நிலைபேறான தன்மையை நோக்கி” எனும் தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ள இம்மகாநாட்டில் இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வு சார்ந்த பிராந்திய மட்டத்தில் மிகவும் முக்கியமான பல தலைப்புகள் பற்றி இத்தினத்தில் கலந்துரையாடப்பட உள்ளன.

 

இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றக் குழுவானது பாராளுமன்றத்தின் விசேட குழுவாக தாபிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது பிராந்திய மகாநாடாக இம்மகாநாடு அமைவது இம்மகாநாட்டின் சிறப்பாகும்.

 

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மாகாண மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பதவியணி தலைமை அதிகாரியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த மகாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

 

மகாநாட்டில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களின் பொழிப்பினை சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் மகாநாட்டின் இறுதியில் ஊடக ஒன்றுகூடலையும் நடாத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom