இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையில் சமூக மற்றும் சமய நல்லுறவு பற்றிய பாராளுமன்றக் குழுவின் 2ஆவது மாநாடு

திகதி : 2018-06-29

இலங்கையில் சமூக மற்றும் சமய நல்லுறவு பற்றிய பாராளுமன்றக் குழுவின் இரண்டாவது மாநாடு 2018 யூன் 29ஆம் திகதி பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் தலைமையில் சகல சமயங்களையும் சேர்ந்த சங்கைக்குரிய சமயத் தலைவர்களினதும் உயர் அரசாங்க அதிகாரிகளினதும் பிரசன்னத்தின் மத்தியில் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியின் குழு அறை 1ல்வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.

 

மேற்குறிப்பிட்ட மாநாட்டிலே, இலங்கையில் சமூக மற்றும் சமய நல்லுறவு பற்றிய பல்வேறு பிரதான தலைப்புக்கள் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டு, இவ்வாறான தீர்மானங்களை செயல்கள் மற்றும் நோக்கத்துடன் இச்செயன்முறையை ஒழுங்கமைத்து முடிவுகளுக்கு வருவதற்காக சகல இனத்துவக்குழுமங்கள் மற்றும் சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தின் இரண்டு தரப்புக்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி கௌரவ சபாநாயகரின் தலைமையின் கீழ் பாராளுமன்றத்தெரிகுழு ஒன்றினை உருவாக்குவது என ஏகமனதாக இணங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவூட்டி, சமூக மற்றும் சமய நல்லுறவினைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இரண்டு மாதங்களுக்கொருதடவை விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் செயலமர்வுகளையும் பிராந்திய அடிப்படையில் நடத்துவதென்றும் அவ்வாறான முதலாவது செயலமர்வினை 2018 ஆகஸ்ட் 06ல் கண்டியில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

மாநாட்டின் முடிவில் கௌரவ சபாநாயகர் மற்றும் சமயத் தலைவர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிலே நிகழ்வின் உள்ளடக்கமும் பகிரப்பட்ட கருத்துக்களும் தொகுத்து வழங்கப்பட்டன.

 

 

 1 2

3 4

5

6

7

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom