இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஒக்டோபர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-10-25

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘C’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் அவதானிப்புகளுடன் கூடிய 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 54ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் பிரிவு 34 இன் பிரகாரம் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு மதிப்பீடுகள்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2014 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது  தொகுதியின் XXVII மற்றும் XXVIII ஆம் பகுதிகளையும் மூன்றாவது  தொகுதியின் XIII பகுதியையும்;
•    2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் X ஆம் பகுதியையும்; மற்றும்
•    2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டின் அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை

(ii)    2017 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி பணிகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(iv)    2016 ஆம் ஆண்டுக்கான நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை
(vi)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை

(vii)    2018 ஆம் ஆண்டின்  1 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(viii)    2016 ஆம் ஆண்டின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தவறாளர்களை ஒப்படைத்தல்  சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஒக்டோபர் 02 ஆம் திகதிய 2091/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களுக்குப் பதிலாக கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே        -      நான்கு மனுக்கள்        
(ii)    கௌரவ அஜித் மான்னப்பெரும                   
(iii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                   
(iv)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

ரூபாய் பெறுமதித் தேய்வு மற்றும் நிதி நெருக்கடி தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

வட மாகாணத்தில் மின் பட்டியலை வழங்காது மின்சார துண்டிப்பு அறிவித்தலை விநியோகித்தல் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(81 ஆம் அத்தியாயமான) கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“கடன் இணக்கம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    நிதிச் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    உற்பத்தித்  தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகளை விடுவித்தல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1709 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஒக்டோபர் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom