இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஒக்டோபர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-10-11

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்ட கம்பனியின் ஆண்டறிக்கை
(ii)    2015 ஆம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் அமைப்பின் வருடாந்த அறிக்கை

(iii)    2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்று அறிக்கை

(v)    இலங்கையின் தேசிய மதிப்பீட்டுக் கொள்கை - 2018


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கபீர் ஹஷீம்                   
(ii)    கௌரவ சிசிர ஜயகொடி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்

மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ பாலித ரங்கே பண்டார சில்வா அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

SAITM மாணவர்களின் தற்போதைய நிலைமை

மேற்சொன்ன வினாவிற்கு உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2007 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, இரசாயன ஆயுதங்கள் சமவாயச் சட்டத்தினைத் திருத்துவதற்காக

“இரசாயன ஆயுதங்கள் சமவாயம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(ii)    இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(iii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மகாவெலி “L” வலய காணிகளை அபகரித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1832 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஒக்டோபர் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom