இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஒக்டோபர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-10-10

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(vi)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2016 ஆம் ஆண்டுக்கான மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார                                        
(ii)    கௌரவ பாலித குமார தெவரப்பெரும     -      மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ ஆனந்த அலுத்கமகே                    
(iv)    கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ ரொசான் ரணசிங்க
(ii)    கௌரவ எஸ். எம் மரிக்கார்
(iii)    கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iv)    கௌரவ அநுர திசாநாயக்க


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

முல்லைதீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு காணிகளை கையளித்தல்

மேற்சொன்ன வினாவிற்கு சுற்றாடல் பிரதி அமைச்சர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை கிரிகெட்டில் ஆட்ட நிர்ணயம் பற்றிய சர்வதேச கிரிகெட் கவுன்சில் விசாரணை

மேற்சொன்ன வினாவிற்கு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    தொல்பொருள் இடங்கள் மற்றும் கலைப்பொருட்களை அழித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.

(ii)    தம் மீது சமூக ஊடக தாக்குதல் தொடர்பாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீடு மீ வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு (ஆதரவாக 59; எதிராக 43) திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப நகர கருத்திட்டத்திற்கு காணிகளை கைப்பற்றல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1923 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஒக்டோபர் 11ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom