இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 செப்டெம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-09-21

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதயீட்டு உறுப்பினர்
‘B’ :  கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்
‘C’ :  அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘D’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மே 31 ஆம் திகதிய 2073/41 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 08 ஆம் திகதிய 2074/39 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 14 ஆம் திகதிய 2075/51 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

ரவி கருணாநாயக்க

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

வடக்கில் பெளத்த மற்றும் தொல்பொருள் தளங்களை அழித்தல்

மேற்சொன்ன வினாவிற்கு உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் லால் கிரேரு அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி நடமாடும் சேவைக்கு மக்களிடமிருந்து பணம் சேகரித்தல்

மேற்சொன்ன வினாவிற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் பதிலளித்தார்.

(iii)    கௌரவ அநுர திசாநாயக்க

இந்தியாவிற்கு திருகோணமலை எண்ணெய் தாங்கியை கையளித்தல்


பாராளுமன்ற சேவையை இடைநிறுத்தல்

பின்வரும் உறுப்பினர்கள் தொடர்பாக பாராளுமன்ற சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் சபை இணங்கியது.

•    கௌரவ பிரசன்ன ரணவீர, பா.உ. - (ஆதரவாக 41; எதிராக 21)
•    கௌரவ விமல் வீரவங்ச, பா.உ. - (ஆதரவாக 39; எதிராக 21)


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i)    மறைந்த கௌரவ எச். எம். உபதிஸ்ஸ சில்வா
(ii)    மறைந்த கௌரவ எம். திலகரத்ன
(iii)    மறைந்த கௌரவ மங்கள முனசிங்க


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை கிரிகெட்டில் நிலவும் நெருக்கடி” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1616 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஒக்டோபர் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom