இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஆகஸ்ட் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-08-24

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2015 ஆம் ஆண்டுக்கான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2013 ஆம் ஆண்டிற்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் நிர்வாக அறிக்கை

(v)    2017 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(vii)    2016 ஆம் ஆண்டின் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின்
(viii)    2016 ஆம் ஆண்டின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு,  தேசிய திட்டமிடல் திணைக்களம், உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்
(ix)    2016 ஆம் ஆண்டின் புத்தசாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின்
(x)    2016 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சின்
(xi)    2016 ஆம் ஆண்டின் நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின்
(xii)    2016 ஆம் ஆண்டின் இலங்கைப் பாராளுமன்றத்தின்
(xiii)    2016 ஆம் ஆண்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்
(xiv)    2016 ஆம் ஆண்டின் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள்  அமைச்சின்
(xv)    2016 ஆம் ஆண்டின் உள்நாட்டலுவல்கள்  அமைச்சின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, களுத்துறை, யாழ்ப்பாணம், அம்பாறை, காலி, அநுராதபுரம், மாத்தறை, மன்னார்,   ஹம்பாந்தோட்டை, புத்தளம், நுவரெலியா, கம்பஹா, திருகோணமலை, மாத்தளை, கண்டி, பதுளை, குருநாகல், மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகங்களின்
(xvi)    2016 ஆம் ஆண்டின் உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் மற்றும் அரசாங்க அச்சகத் திணைக்களம்
(xvii)    2016 ஆம் ஆண்டின் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின்
(xviii)    2016 ஆம் ஆண்டின் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
(xix)    2016 ஆம் ஆண்டின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை  அமைச்சு மற்றும் கட்டடத் திணைக்களத்தின்
(xx)    2016 ஆம் ஆண்டின் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின்,  காணி ஆணையாளர் திணைக்களம், காணி நிர்ணயத் திணைக்களம், நிலஅளவை, நில வரைபட திணைக்களம் மற்றும் காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
(xxi)    2016 ஆம் ஆண்டின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம்
(xxii)    2016 ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துமத அலுவல்கள் மற்றும் கலாச்சார திணைக்களத்தின்
(xxiii)    2016 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சின்
(xxiv)    2016 ஆம் ஆண்டின் சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்களின்
(xxv)    2016 ஆம் ஆண்டின் சமூக நலன்புரி மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம்
(xxvi)    2016 ஆம் ஆண்டின் வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சின், தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களம், வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய தாவரப் பூங்கா திணைக்களம்
(xxvii)    2016 ஆம் ஆண்டின் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின், தொழில் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் தொழில்துறை திணைக்களம்

செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்

(xxviii)    (107 ஆம் அத்தியாயமான) நொத்தாரிசுமார் கட்டளைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 7 ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 யூலை 27 ஆம் திகதிய  1977/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(xxix)    1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க,விளையாட்டுக்கள் கட்டளைச் சட்டத்தின் 41  ஆம் பிரிவின் கீழ்  மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மே 31 ஆம் திகதிய 2073/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளருக்குப் பதிலாக கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜே.சீ. அலவத்துவல                   
(ii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                   
(iii)    கௌரவ எம்.எஸ். தெளபீக்                   
(iv)    கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                   
(v)    கௌரவ மயந்த திசாநாயக்க                   
(vi)    கௌரவ சந்தித் சமரசிங்க                     
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பானது

மேற்சொன்ன வினாவுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    சர்வதேச வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லலுக்கான குறித்தசில விதிகளை ஒன்றாக்குவதற்கான சமவாயத்துக்குப் பயன்கொடுப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல்”

எனும் சட்டமூலத்தினை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பிரேரித்தார்.

(ii)    1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, இலங்கை ஆளணி முகாமை நிறுவகச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக எவ்வித வாக்குகளும் இல்லை; எதிராக 139) சபையினால் அங்கீகரிக்கப்படவில்லை.


படைக்கலச் சேவிதரின் ஓய்வு பெறல் சம்பந்தமாக சபாநாயகர் அவர்களினால் அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன் பாராளுமன்றம் அவரின் சேவையை பாராட்டியது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom