இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜூன் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-06-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ முஹமட் நவவி அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ சீனி மொஹமட் மொஹமட் இஸ்மயில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின்  XXVII ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் XV, XVIII    மற்றும் XXI ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும்,  நான்காவது தொகுதியின் IV ஆம் பகுதியையும்,  ஆறாவது தொகுதியின் IV ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயற்திறன் அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்று மற்றும் கணக்கறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ix)    2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(x)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பிரசன்ன ரணதுங்க      -         இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தினால் (TRC) ரி.என்.எல். ரூபவாஹினி நிறுவனத்தின் பொல்கஹவல பரிமாற்ற கோபுரத்தை மூடுதல்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தெற்காசிய தொழினுட்பவியல் மற்றும் மருத்துவ நிறுவகத்திடம் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களை 1981 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க, சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஜெனரால் சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளீர்த்தல் தொடர்பான தேசியக் கொள்கையை விதிப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“ஜெனரால் சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்)”

எனும் சட்டமூலத்தினை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம்

சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஹபராதுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் கிராமிய வங்கி எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1909 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom