இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 மே 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-05-11

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ சபாநாயகருடனான விசேட கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யுத்த காலத்தின்போது செயற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை தீர்த்தல்

மேற்சொன்ன வினாவிற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-

(i)    கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) - (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தைத்  திருத்துவதற்காக
(ii)    மகப்பேற்று நன்மைகள் (திருத்தம்) - (140 ஆம் அத்தியாயமான) மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1256 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom