இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-05-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘B’ :  “தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம்        உறுப்புரையின் பிரகாரம், 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIV ஆம் மற்றும் XV ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் III ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (2017.07.01 - 2017.09.30) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 24இ மற்றும் 24ஈ பிரிவுகளின் கீழ் வரதன்ன -  ஹக்கிந்த சூழற் பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 யூன்  19 ஆம் திகதிய 2024/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின்  51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக  சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின்  51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக  சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின்  51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம்  தொடர்பாக  சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின்  23 ஒ மற்றும் 23 ஓ பிரிவுகளுடனும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின்  51 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும், அச்சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக  சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின்  51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக  சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின்  51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக  சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(viii)    2017 ஆம்  ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான  நிதி செயலாற்றுகை அறிக்கை
(ix)    2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.03.01 முதல் 2018.03.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(x)    1985 ஆம் ஆண்டின்  48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க,  இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பட்டுச்)  சட்டத்தின் 4(3)  ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரின் கீழ் 2017 இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டு(தரப்படுத்தலும் தரக்கட்டுப்பாடும்) ஒழுங்குவிதிகள்—2017 தொடர்பில்  அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மார்ச்  29 ஆம் திகதிய 2064/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

இரணதீவில் வாழும் மக்களுக்கான மீள்குடியமர்த்தல், வசதிகள், போன்றன

மேற்சொன்ன வினாவிற்கு அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.


தனிப்பட்ட விளக்கங்கள்

தாங்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து  கொண்டமை தொடர்பாக கௌரவ எஸ். பீ. திசாநாயக்க அவர்கள் தனிப்பட்ட விளக்கமொன்றினை முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-

(i)    விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தம்) - (393 ஆம் அத்தியாயமான) விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii)    இலஞ்சம் (திருத்தம்) - (26 ஆம் அத்தியாயமான) இலஞ்சச் சட்டத்தை திருத்துவதற்காக
(iii)    இலங்கை தேயிலைச் சபை (திருத்தம்) - தேசிய அரசுப் பேரவையின் 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கை தேயிலைச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்

2018 மார்ச்சு 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட புதிய நிலையியற் கட்டளைகள், சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்படல் வேண்டும்

(ii)    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை

2018 மார்ச்சு 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்படல் வேண்டும்

(iii)    குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இல. 101, 111 மற்றும் 124 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், தற்போது செயற்படும் விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் நடவடிக்கைகள்  மேலும் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும்

(iv)    தெரிவுக் குழு

•    பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 114 இன் பிரகாரம் தற்போதைய அமர்வுத்தொடரில்  பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவில் தவிசாளராகச் சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர்குறித்து நியமிக்கப்பட வேண்டிய  அரசியற் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களது நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்

•    இன்றைய தினம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், தெரிவுக் குழுவின் தவிசாளராகிய சபாநாயகருக்கு மேலதிகமாக, பின்வரும் பன்னிரெண்டு (12) உறுப்பினர்கள் தற்போதைய அமர்வுத்தொடரில் இக்குழுவில் பணியாற்றுதல் வேண்டும்:-

கௌரவ ரஊப் ஹகீம்
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ
கௌரவ றிஸாட் பதியுதீன்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
கௌரவ மனோ கணேசன்
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ மாவை. சோ. சேனாதிராசா
கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு - ஆதரவாக 119; எதிராக 52)
(ii)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(iii)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்


அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 10ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom