இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-02-22

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் விசேட கணக்காய்வு அறிக்கை - VI ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-

(i)    2017 நவெம்பர் 09 ஆம் திகதிய 2044/32 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(ii)    2017 நவெம்பர் 15 ஆம் திகதிய 2045/32 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iii)    2017 நவெம்பர் 15 ஆம் திகதிய 2045/33 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv)    2017 நவெம்பர் 22 ஆம் திகதிய 2046/14 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v)    2017 நவெம்பர் 28 ஆம் திகதிய 2047/25 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(vi)    2015 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதயம்
(vii)    2005/2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கான லங்கா சதொச லிமிடட்
(viii)    2016 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(ix)    2016 ஆம் ஆண்டுக்கான மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) தலதா அதுகோரல                    
(ii)    கௌரவ திலிப் வெதஆரச்சி                    
(iii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                     -          ஐந்து மனுக்கள்
(iv)    கௌரவ துனேஷ் கன்கந்த                    
(v)    கௌரவ கருணாரத்ன பரணவிதான                    
(vi)    கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                    
(vii)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண       -           இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i)    மறைந்த கௌரவ (பேராசிரியர்) டபிள்யூ.ஏ. விஸ்வா வர்ணபால
(ii)    மறைந்த கௌரவ ஈலியன் எம். நாணாயக்கார


அதனையடுத்து, 1451 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 6ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom