இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜனவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-01-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : கௌரவ எம். எச். எம். சல்மான், பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
‘B’ : பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பான அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு தொடர்பான விவாதத்தினை பிற்போடல்
‘C’ : ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் தொடர்பானது


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

•    2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும்;
•    2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும்;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும்; மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் V, VI, VII, VIII, IX, மற்றும் X ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் III ஆம் மற்றும் IV ஆம் பகுதிகளையும் ஒன்பதாவது தொகுதியின் II ஆம்  பகுதியையும்

இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் அல்லது ஊழல்
(ii)    2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான ஊழியர் சேமலாப நிதியம்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றம்
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு
(v)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபை
(vi)    2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம்
(vii)    2015 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை
(viii)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(ix)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம்
(x)    2012, 2013, 20142015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xi)    இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) உறுப்புரையின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் 2017 திசெம்பர் 04 ஆம் திகதி ஆக்கப்பட்ட 2048/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஊடக வழிகாட்டு நெறிகள்
(xii)    2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரையிலான நிதிச் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 8 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின்  6 (2) ஆம் பிரிவின் கீழ் தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் மற்றும் வர்த்தக அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 நவெம்பர் 07 ஆம் திகதிய 2044/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv)    2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.11.01 முதல் 2017.12.29 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xv)    2015 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 2016 மார்ச்சு 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் திறைசேரி பிணை முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை
(xvi)    பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை
(xvii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, சவுத் ஏஷியன் இன்ஸிரிரியுற் ஒப் டெக்னோலொஜி அன்ட் மெடிசின் லிமிடெட்  நிறுவனத்தை உயிர் முறைமையியல் கௌரவ விஞ்ஞான இளமாணிப் பட்டம்  மற்றும் கலம்போ இன்டர்நஷனல் நோட்டிக்கல் அன்ட் என்ஜினியரிங்  கொலேஜ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தை சில்லறை சந்தைப்படுத்தல் மற்றும் பண்டக்குறியிடுதலில்  கௌரவ முகாமைத்துவ இளமாணி மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவத்தில் கௌரவ முகாமைத்துவ இளமாணி பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 28 ஆம் திகதிய 2047/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xviii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) (ஆ) ஆம் பிரிவின்  கீழ்  சவுத் ஏஷியன் இன்ஸிரிரியுற் ஒப் டெக்னோலொஜி அன்ட் மெடிசின் (பிறைவேட்) லிமிடெட்  (SAITM) நிறுவனம்  தொடர்பில்   உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 செத்தெம்பர்  26 ஆம் திகதிய  1829/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2011 ஆகஸ்ட்  30 ஆம் திகதிய  1721/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையைத் திருத்தி  2017 திசெம்பர் 12 ஆம் திகதிய 2049/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 44 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின்  321 ஆம் பிரிவின் கீழ் 2017 ஆம் ஆண்டின் வணிகக் கப்பற்றொழில் (சிறியவர்த்தகக் கலன்கள்) ஒழுங்குவிதிகள் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 04 ஆம் திகதிய 2017/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xx)    2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்  118 ஆம்     பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும்   142 ஆம் பிரிவின் கீழ் 2016 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (விலைகளின் மீதான உச்சவரம்பு) ஒழுங்குவிதிகள் தொடர்பில்     சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 திசெம்பர் 14 ஆம் திகதிய 2049/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxi)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதிச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 27 ஆம் திகதிய 2047/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜே.சீ. அலவத்துவல                   -               இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ அஜித் மான்னப்பெரும                    
(iii)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ       -              பதினாறு மனுக்கள்
(iv)    கௌரவ தாரக்க பாலசூரிய                    
(v)    கௌரவ பிரசன்ன ரணவீர                    
(vi)    கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கையிலுள்ள சில நிதி நிறுவனங்களில் காணப்படும் நெருக்கடி


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-

(i)    புலமைச் சொத்து (திருத்தம்) - 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, புலமைச் சொத்துச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii)    நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தம்) - (87 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புக்கள் கட்டளைச் சட்டத்தைக் திருத்துவதற்காக


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களுக்கு “ஸ்ரீ நாத அகஸ்தான சர்வதேச புத்த தியான நிலைய செயலாற்றுகைச் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii)    கெளரவ இஷாக் ரஹுமான் அவர்களுக்கு “நிமல் ரூபசிங்ஹ நட்புறவு மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே புத்தசாசன  அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


அதனையடுத்து, 1356 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜனவரி 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom