இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 டிசம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-11

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கல்வி மற்றும் மனிதவள பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டபிள்யூ. டீ. ஜே. செனெவிரத்ன                    
(ii)    கௌரவ முஜிபுர் ரஹுமான்     

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“மதுவரி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பிரேரித்தார்.


சிறப்புரிமைகள்

(i)    பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்களால் 2017 நவம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம்,

(ii)    தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரொசான் ரணசிங்க அவர்களால் 2017 நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம்

என்பன கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 1 மற்றும் 4 முதல் 7 வரையானவை அங்கீகரிக்கப்பட்டதுடன் 2 மற்றும் 3 என்பவை எதிர்வரும் தினமொன்றுக்காக ஒத்திவைக்கப்பட்டன:-

(i)    ஒதுக்கீட்டு (திருத்தச்)  சட்டமூலம் - வாக்கெடுப்பின் போது (ஆதரவாக 53; எதிராக 08)
(ii)    மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii)    முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்

(v)    இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(vi)    அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் - வாக்கெடுப்பின் போது (ஆதரவாக 52; எதிராக 08)


அதனையடுத்து, 1126 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜனவரி 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom