இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 டிசம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 21, 22, 23, 24  மற்றும் 24அ  பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 18 ஆம் திகதிய 2032/36 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                    
(ii)    கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே                    
(iii)    கௌரவ துனேஷ் கன்கந்த

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கைப் பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும்; சந்தை நிறுவனங்களையும், பிணையங்கள் பற்றிய பகிரங்கக் கொடைமுனைவுகளையும், சந்தை இடைத்தரகர்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும்; சந்தை தொடர்பிலான துர்நடத்தையைக் கையாளுவதற்கும்; பிணையங்கள் சந்தைகளினால் எதிர்நோக்கப்பட்ட சவால்களைப் பயனுள்ள மற்றும் வினைத்திறனான முறையில் எதிர்கொள்வதற்கும் 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கைப் பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக

“பிணையங்கள் பரிவர்த்தனை”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட இருபத்தொராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom