2017 டிசம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-05

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான (2016.10.01 - 2016.12.31) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ்     2017.10.01 முதல் 2017.10.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்     திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவின் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 2, 12, 22 மற்றும் 25 ஆம் பிரிவுகளின் கீழ், குடிபானமல்லாத ஸ்பிரித்து இறக்குமதி  மீதான மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல். (மதுவரி அறிவித்தல் இலக்கம் 999)


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த சமரசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ தயா கமகே                    
(ii)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே                    
(iii)    கௌரவ புத்திக பத்திறண                    
(iv)    கௌரவ அஜித் மான்னப்பெரும         -       நான்கு மனுக்கள்
(v)    கௌரவ பிரசன்ன ரணதுங்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கல் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வெங்காய விதைகளை வழங்கல் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

காலி, கிந்தோட்டையில் இடம்பெற்ற அண்மைய சம்பவம் காரணமாக மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2017.11.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.


தெரிகுழுக்கள்

பிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத்  தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற தெரிகுழு

இதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இயலாதுள்ளதால் 2018 யூன் மாதம் 05 ஆம் திகதிவரை காலத்தை நீடிப்பதற்கான பாராளுமன்றச் சபை முதல்வர் கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களால் 2017 நவம்பர் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட இருபதாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(ii)    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 06ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.