இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 டிசம்பர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-04

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
‘B’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஆனந்த அலுத்கமகே                   
(ii)    கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

வெள்ளங்கள் மற்றும் புயல் காரணமாக இயற்கை அனர்த்தம் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தம்) - 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட  ஏற்பாடுகள்) (திருத்தம்) - 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட  ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 20 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(ii)    தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    அரச மருந்துக் கூட்டுத்தாபன வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013
(iv)    ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013
(v)    அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013
(vi)    விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(vii)    இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013
(viii)    ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2011
(ix)    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012
(x)    நிர்மாணப் பயிற்சி அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xi)    அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2012


அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom