இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-30

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  “e-Chamber” முறைமையினை பாவித்தல் மற்றும் தொடர்புடைய பயிற்சிநெறி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ், மதுபானம் மீதான மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மதுவரி அறிவித்தல் இலக்கம் 1000)
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 2 ஆம் பிரிவின் கீழ், மதுவரி அறவிடத்தக்க பொருட்கள் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மதுவரி அறிவித்தல் இலக்கம் 1001)
(iii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ், எதனோல் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மீதான மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மதுவரி அறிவித்தல் இலக்கம் 1002)
(iv)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ், 2015 திசெம்பர் 04 ஆம் திகதிய 1943/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 981 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலை இரத்துச்செய்து நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 நவம்பர் 15 ஆம் திகதிய 2045/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மதுவரி அறிவித்தல் இலக்கம் 1003)


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா         -         மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ நிஹால் கலப்பத்தி                    
(iii)    கௌரவ தாரக்க பாலசூரிய                    
(iv)    கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரிய உதவியாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் தனது பிரசன்னம் தொடர்பாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சபையில் கூற்றினை முன்வைத்தார்.

(ii)    வடமாகாணத்தில் சட்டவிரோத மீன் பிடித்தல் தொடர்பாக 2017.11.16 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதினெட்டாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1634 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 04ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom