இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 29ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-29

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ. அவர்கள்
‘B’ :  கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. அவர்கள்

ஆகியோரது சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக கேள்விகள் எழுப்பிய விடயங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின்  4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்

(iv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின்  4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்  அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார         -         ஐந்து மனுக்கள்
(ii)    கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா            -         நான்கு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 20 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(ii)    ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012/2013
(iii)    ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்- 2013/2014
(iv)    இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2011
(v)    தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015
(vi)    இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015
(vii)    மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015
(viii)    வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2014
(ix)    இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2014
(x)    தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்ககள் - 2014
(xi)    மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2014
(xii)    இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2014
(xiii)    சிலாபம் பெருந்தோட்டக் கம்பனியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை-2014
(xiv)    பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை-2014
(xv)    ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2014/2015
(xvi)    ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015/2016
(xvii)    ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013/2014
(xviii)    லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்-2013
(xix)    லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்-2014
(xx)    எச்டிஎப்சி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்-2014


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வலைகளைப் பயன்படுத்தி இறால் மீன்பிடித்தலில் ஈடுபடும் மீனவர்களுக்கான நிவாரணம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சனத் நிசாந்த பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1936 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 30ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom