இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-10

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக அமர்வதற்கு தகைமையற்றவராக மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய எட்டாவது பாராளுமன்றத்தின் உறுப்பினரொருவரின் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதுடன் அதனை நிரப்புவதற்காக கெளரவ இஹல மெதகம கமகே பியசேன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் (2017.04.01 -2017.06.31) மற்றும் மூன்றாம்  (2017.07.01 - 2017.09.30) காலாண்டுகளுக்கான  நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
மற்றும்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (2017.01.01 - 2017.03.31) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத் தரைப்படை
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களம்
(v)    2015 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம்
(vi)    2016 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vii)    2014 ஆம் ஆண்டுக்கான மில்கோ (பிறைவேற்) லிமிடெட்
(viii)    2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ லக்கி ஜயவர்தன                    
(ii)    கௌரவ புத்திக பத்திறண         -       இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம்.எஸ். தெளபீக் அவர்களுக்கு “ஜே ஸ்ரீ ரங்கா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வட மாகாணத்தில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக சுகாதாரத் துறை பதவியணியனரின் பற்றாக்குறை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1918 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2017 நவம்பர் 11ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom