இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

எட்டாவது பாராளுமன்றத்திலுள்ள ஆசனமொன்று வெற்றிடமாகியுள்ளமை சம்பந்தமான அறிவித்தல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு
(ii)    2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 4 ஆம் மற்றும் 7 ஆம் பிரிவுகளின் கீழ் வெளியிடப்படும் அரசிறை முகாமைத்துவ அறிக்கை - 2018


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - இரண்டாம் மதிப்பீடு

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் இன்று பி.ப. 03.00 மணியளவில் (2018ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2018 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், 2017 நவெம்பர் மாதம் 13 ஆம் திகதி  திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.


இதனையடுத்து, 1743 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2017 நவம்பர் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom