இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  2017 நவம்பர் 09ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றிய பாதுகாப்பு தொடர்பானது
‘C’ : 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─     
•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII பகுதியையும் மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்; மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகளையும்,  மூன்றாவது தொகுதியின் II ஆம் பகுதியையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) உறுப்புரைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) அரசாங்க  சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
(iii)     இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் (2017.01.01 - 2017.03.31) மற்றும் இரண்டாம் காலாண்டுகளுக்கான (2017.04.01 - 2017.06.30) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
(iv)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (2017.01.01 - 2017.03.31) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
(v)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) தேசிய பெறுகை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(vi)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம்
(ii)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை
(iii)    2014 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கி
(v)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi)    2016 ஆம் ஆண்டுக்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம்
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(viii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உற்பத்தி வரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 17 ஆம் திகதிய 2032/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-
(ix)    2017 மே 30 ஆம் திகதிய 2021/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(x)    2017 யூன் 06 ஆம் திகதிய 2022/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(xi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 06 ஆம் திகதிய 2022/8ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட கட்டளை

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-
(xii)    2017 யூன் 30 ஆம் திகதிய 2025/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xiii)    2017 யூலை 19 ஆம் திகதிய 2028/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xiv)    2017 யூலை 26 ஆம் திகதிய 2029/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xv)    2017 யூலை 31 ஆம் திகதிய 2030/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xvi)    2017 ஆகஸ்ட்  01 ஆம் திகதிய 2030/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xvii)    2017 ஆகஸ்ட் 15 ஆம் திகதிய 2032/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xviii)    2017 ஆகஸ்ட் 16 ஆம் திகதிய 2032/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xix)    2017 ஆகஸ்ட்  23 ஆம் திகதிய 2033/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xx)    2017 செத்தெம்பர் 08 ஆம் திகதிய 2035/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்     பத்திரிகை
(xxi)    2017 ஒற்றோபர் 02 ஆம் திகதிய 2039/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(xxii)    2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.09.01 முதல் 2017.09.30 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

(xxiii)    1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பற்சரக்கனுப்புனருக்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனருக்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துனருக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ், 2017 ஆம் ஆண்டின் கப்பற்றொழில் முகவர்கள், கப்பற்சரக்கனுப்புனர்கள், கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனர் மற்றும் கொள்கலன் செயற்படுத்துனர் (கட்டணங்களின் அமைப்பு முறை) தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர்  17 ஆம் திகதிய 2041/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xxiv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின்  4 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் விசேட இறக்குமதி அனுமதிப்பத்திரக் கட்டணம் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர் 02 ஆம் திகதிய 2039/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                  -                    நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி           -                    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பானது

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

எரிபொருள் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தலின் போது பின்பற்றப்படுகின்ற பொருத்தமற்ற நடைமுறை தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பதிலளித்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    நீதித்துறை (திருத்தம்)
(ii)    குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தம்)
(iii)    குற்றச்செயல்களைத் தடுத்தல் (திருத்தம்)
(iv)    உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கலை (விசேட) பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1856 மணியளவில் பாராளுமன்றம் 2017 நவம்பர் 09ஆந் திகதி வியாழக்கிழமை 1500 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom