2017 செப்டெம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-09-22

Print

சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தலைமை தாங்கினார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’:    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பியங்கர ஜயரத்ன   அவர்களுக்குப் பதிலாக     கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிசிர ஜயகொடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை 

‘B’: பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிசிரஜயகொடி    அவர்களுக்குப் பதிலாக   உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பியங்கர ஜயரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை

‘C’:மேலதிக பாராளுமன்ற அமர்வு தினங்கள் பற்றிய அறிவித்தல்

•    2017 செப்தெம்பர் 26 செவ்வாய்க்கிழமை
•    2017 ஒற்றோபர் 03 (இலங்கையின் முதலாவது சனநாயகப் பாராளுமன்றத்தின் 70 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விசேட அமர்வு தினம்)
•    2017 ஒற்றோபர் 09 ஆம் திகதி


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                     -            இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாலித குமார தெவரப்பெரும      -            இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.)


சபையின் பொது அலுவல்கள்

இன்றைய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தின்  *1 முதல் *3 வரையிலான இலக்க விடயங்களாகக் காணப்படும் பின்வரும்  விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்)  சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரண்டு  ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு  வேளையின் போதான  பிரேரணை

“திருகோணமலைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் சட்ட விரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் காரணமாக சிறியளவிலான மீனவத்துறையில் ஈடுபடும் மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள்” தொடர்பாக உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி பிரேரித்தார்.


பாராளுமன்றமானது 1846 மணியளவில் 2017 செப்தெம்பர் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.