இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-09-20

சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை தாங்கினார்.


பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

(அ) ஆண்டறிக்கைகள்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(ii)    2014 ஆம் ஆண்டுக்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை.

(ஆ) செயலாற்றுகை அறிக்கைகள்

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை;
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.
(v)    2016 ஆம் ஆண்டுக்கான மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றல் அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காமினி லொக்குகே அவர்களின் சார்பாக, குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
(ii)    கௌரவ ச. வியாழேந்திரன் , பா.உ. 

(மனுக்கள் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.)   


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 23(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளரான இளவரசர் ஸெயிட் ராட் அல் ஹசைனினால் கடந்த வாரம் இலங்கைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்தினை மறுதலிப்பதற்கு  அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

வட மாகாணத்தில் வவுனியா வடக்கு கிராமங்களிலும், மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பல கிராமங்களிலும் காட்டு யானைகளால் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சாவகச்சேரி உள்ளடங்கலான பிரதேசங்களில் குரங்குகளால் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான நிவாரணம்


அமைச்சு சம்பந்தப்பட்ட  கூற்றுக்கள்

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட  வினாவிற்குப் பதிலளித்தார்.


சபையின் பொது அலுவல்கள்

இன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் *1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் “மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்” எனும் சட்டமூலமானது, (சமுகமளிக்காதோர் உட்பட) மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை வாக்குகளால்   திருத்தங்களுடன் சபையால் முறையாக நிறைவேற்றப்பப்பட்டது.


பாராளுமன்றமானது 2054 மணியளவில் 2017 செப்தெம்பர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom