இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-09-19

சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஆற்றுப்படுத்தப்பட்ட, “அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு

‘B’:     பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம்


பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

(அ) செயலாற்றுகை அறிக்கைகள்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சு;
(ii)   2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படை;
(iii)  2016 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களம்;
(iv)  2016 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு

(ஆ) சட்டங்களின் கீழான ஒழுங்குவிதிகள்

(v)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்  14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 01 ஆம் திகதிய 2030/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)  கௌரவ வஜிர அபேவர்தன                    
(ii)  கௌரவ சாலிந்த திசாநாயக்க

(மனுக்கள் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

இல.15/1990 ஆம்  பொது நிர்வாகச் சுற்றறிக்கையினை மீண்டும் நடைமுறைப்படுத்தி, அரச சேவையிலுள்ள சகல ஆட்சேர்ப்பினையும் இன விகிதாசாரப்படி  மேற்கொள்ளப்பட வேண்டும்.


அமைச்சு சம்பந்தப்பட்ட  கூற்றுக்கள்

(i)    உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக, கௌரவ பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க.

(ii)    தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், கௌரவ நிரோஷன் பெரேரா கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட  வினாவிற்குப் பதிலளித்தார்.


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ அருந்திக்க பர்னாந்து.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக

“மாகாண சபைத் தோ்தல்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக, கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.

(ii)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“நீதித்துறை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினரின் சட்டமூலங்கள்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள்,

“1976 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, இலங்கை றிபாய் தரீக் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” எனும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.

மேற்படி சட்டமூலமானது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 47 (5) இன் கீழ், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


சபையின் பொது அலுவல்கள்

இன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் *1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம்  எனும் சட்டமூலம் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பப்பட்டது.


ஒத்திவைப்பு  வேளையின் போதான  பிரேரணை

“கிளிநொச்சி நகரசபை, கண்டாவளைப் பிரதேச சபை மற்றும் கரச்சி பிரதேச சபை ஆகியவற்றை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையொன்று கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்றமானது 18.36 மணியளவில் 2017 செப்தெம்பர் 20 ஆம் திகதி புதன்கிழமை 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom