இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 செப்டெம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-09-08

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

• 2009 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின்  V ஆம் பகுதி;
• 2010 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின்  VI ஆம் பகுதி;
• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின்  VI ஆம் பகுதி;
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின்  IX ஆம் பகுதி;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின்  VIII பகுதியையும் ; மற்றும்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)   கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                   
(ii)  கௌரவ அசோக் அபேசிங்க                   
(iii) கௌரவ ஜயந்த சமரவீர

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் தொடர்பாக “சிரச தொலைக்காட்சி” செய்தி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தவறான செய்தி அறிக்கை பற்றி பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1,2,4 மற்றும் 7 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

(i) தற்போது செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்குகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல்

சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களின் தலைமை தேரர், மதகுரு, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர், சனசபைச் செயலாளர்கள், பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகத்தர், மற்றும் உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உரிய பிரிவில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை மிகவும் எளிதாக்கும் பொருட்டு தற்போதைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமொன்றை வழங்கக்கூடியவாறான பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்படுதல் வேண்டுமெனவும் அதனூடாக கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், துர்நடத்தைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் சிறந்த தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமானவாறு குறித்த சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(ii) கண்டி நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைத்தல்

இலங்கையின் இரண்டாவது தலைநகரான கண்டி நகர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் சுற்றுலா நிலையமாக காணப்படுவதாலும், கண்டி நகருக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையான மக்கள் வருகை தருவதுடன் இம்மக்கள் கண்டி நகரிலும் அண்மித்த வீதிகளிலும் உள்ள அதிக வாகன நெரிசல் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாலும், கண்டி நகரில் வாகன நெரிசலை குறைப்பதற்காக துரித தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(iii) ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக் கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்தல்

இலங்கையின் இரண்டாவது தலைநகரான கண்டி நகர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் சுற்றுலா நிலையமாக காணப்படுவதாலும், கண்டி நகருக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையான மக்கள் வருகை தருவதுடன் இம்மக்கள் கண்டி நகரிலும் அண்மித்த வீதிகளிலும் உள்ள அதிக வாகன நெரிசல் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாலும், கண்டி நகரில் வாகன நெரிசலை குறைப்பதற்காக துரித தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(iv) யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவுகூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல்

வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாக காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக்கள் பிரவேசித்துள்ளதோடு, கடந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலைமையின் காரணமாகவும், யுத்த நிலவரம் காரணமாகவும், படுகொலைக்கு உள்ளான அனைத்து இன, மத மற்றும் சமூகங்களைச் சேர்ந்த, சகல மொழிகளையும் பேசுகின்ற மக்களை இலங்கையர்களாக நினைவுகூர்ந்து, அம்மக்கள் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்காக, வட மாகாணத்தின் ஓமந்தைப் பிரதேசத்தில் பொருத்தமானதோர் இடத்தில் “நினைவுத்தூபியொன்றை”அமைப்பதற்கும், மேற்படி யுத்த நிலவரம் காரணமாக உயிரிழந்த சகல இன, மத மற்றும் மொழிகளைப் பேசுகின்ற மக்களை நினைவுகூர்வதற்காக பொருத்தமான திகதியொன்றை பெயரிட்டு ஒவ்வோர் ஆண்டும் அத்தினத்தைக் கொண்டாடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மொனராகலையிலுள்ள கரும்பு தொழிற்துறை கருத்திட்டத்தின் காரணமாக சுற்றுச்சூழல் அழிவு மற்றும் முதலியன” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1545 மணியளவில் பாராளுமன்றம் 2017 செப்டெம்பர் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom