இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஆகஸ்ட் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-08-10

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XI, XII, XIII, XX ஆம் மற்றும் XXI ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VII, VIII ஆம் மற்றும் IX ஆம் பகுதிகளையும் ஐந்தாவது தொகுதியின் III ஆம் மற்றும் IV ஆம் பகுதிகளையும் எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதியையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vii) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான சலுகை உடன்படிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) உற்பத்திகளும் சேவைகளும்  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ வசந்த அலுவிஹாரே                   
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன         -      இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

அரசாங்கத்தால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணங்களைக் குறைத்தல் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

சந்தையில் மிளகின் விலை குறைந்ததன் காரணமாக மிளகு பயிர்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2016ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom