இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-08-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2017 ஆம் ஆண்டின்  1 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு

(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்   கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ரஜரட்டை பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் பீடத்தின்   ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவை ஆங்கில மொழி கற்பித்தல் துறையாகத் தரமுயர்த்துதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2017 யூன் 30 ஆம் திகதிய 2025/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்   கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் ஆங்கிலமொழி கற்பித்தல் துறையொன்றை நிறுவுவது  தொடர்பில்  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2017 யூன் 30 ஆம் திகதிய 2025/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iv) 2016 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்ட செயலகம்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களம்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸ்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(viii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iv) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ நிஹால் கலப்பத்தி                      -          மூன்று மனுக்கள்
(ii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி         -          இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மூன்று வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(ii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(iii) கௌரவ சி. சிறீதரன்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நெடுந்தீவு பகுதியிலுள்ள குதிரைகளின் (Mule) எண்ணிக்கையை பாதுகாத்தல் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வேளாண்மை விதைகளின் உற்பத்திகளை வெளிநாட்டு கம்பனிக்கு அளித்தல் தொடர்பாக 2017.0728 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ வேலு குமார் அவர்களுக்கு “அரவிந்த் குமார் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்களுக்கு “கே.கே. பியதாஸ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் மேற்கொள்ளல்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom