இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஆகஸ்ட் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-08-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

• 2002 முதல் 2006 வரையிலான நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதி;
• 2007 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIII ஆம் மற்றும் XIV ஆம் பகுதிகளையும்;
• 2008 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் X ஆம் மற்றும் XI ஆம் பகுதிகளையும்;
• 2009 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIII ஆம்  மற்றும் XIV ஆம் பகுதிகளையும்;
• 2010 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XV ஆம் மற்றும் XVI ஆம் பகுதிகளையும்;
• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும்;
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும்;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும்;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் VII ஆம் பகுதிகளையும் ; மற்றும்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI, VII, XIV, XV, XVI, XVII மற்றும் XVIII ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் III, V மற்றும்VI   ஆம் பகுதிகளையும் ஒன்பதாவது தொகுதியின் I, II மற்றும் III  ஆம் பகுதிகளையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான தாவரவியற் பூங்காக்கள் நம்பிக்கை நிதியம்
(ii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை திரிபோஷ கம்பனி
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை சேமிப்பு வங்கி
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2016 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கை

(vi) 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் முத்திரைத் தீர்வை தொடர்பாக ஆக்கப்பட்டு, 2017 பெப்புருவரி 21 ஆம் திகதிய 2007/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vii) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ்  2017.06.01 முதல் 2017.06.30 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) (ஆ) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால்  ஆக்கப்பட்டு, கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் நிர்வாகிக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை-

(viii) 2017 பெப்புருவரி 27 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்தல் தொடர்பில் 2017 யூன்  29 ஆம் திகதிய 2025/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2017 மே  27 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்தல் தொடர்பில் 2017 யூன்  29 ஆம் திகதிய 2025/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத் தெரிகுழுவின் இடைக்கால அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள்  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஹர்ஷண ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iv) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஹர்ஷண ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ பாலித குமார தெவரப்பெரும    -     இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ முஜிபுர் ரஹுமான்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

முல்லைதீவு நந்திக்கடல் நீரேரியை புனரமைப்பு செய்தல் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அம்பாறையில் பஸ் தரிப்பு நிலையத்தை நிர்மாணிக்கும் போது சில மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக 2017.07.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(22 ஆம் அத்தியாயமான) குற்றச்செயல்களைத் தடுத்தல் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக

“குற்றச்செயல்களைத் தடுத்தல் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைசரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தம்)
(ii) இலங்கை ஜோ்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ரத்மலானையிலுள்ள விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கான விடுதி வசதிகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom