இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூலை 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-07-05

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2017  இன் முதல் காலாண்டின் நிதிச் செயலாற்றுகை (மொத்தமாக) தொடர்பிலான அறிக்கை

(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிச் சபை
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்துகள் நிறுவனம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுக் கட்டிடத்தொகுதி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2014 ஆம் ஆண்டுக்கான மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டச் செயலகம்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்டச் செயலகம்
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்டச் செயலகம்
(ix) 2016 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(ii) கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(iv) கௌரவ பிமல் ரத்நாயக்க


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

குடிநீருடன் உவர் நீர் கலத்தலினால் வட மாகாணத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i) உண்ணாட்ரசிறை - 2017, ஏப்பிறல் 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டுக்காக வருமான வரி விதிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கான

(ii) இலங்கை ஜோ்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம் - இலங்கை ஜோ்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகத்தைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; நிறுவகத்தின் தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் குறித்துரைப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கான

சட்டமூலங்களை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைசரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பதுளை மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 06ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom