இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மே மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2017-04-18

2017, ஏப்ரல் 04ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 மே 03 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பத்து கட்டளைகள்
(இக்கட்டளைகள் 2016.11.21, 2016.12.09, 2016.12.20, 2017.01.06, 2017.01.18, 2017.01.27, 2017.02.16, 2017.02.23, 2017.02.26 மற்றும் 2017.03.07ஆம் திகதிகளிலான முறையே 1994/20, 1996/50, 1998/5, 2000/85, 2002/29, 2003/43, 2006/41, 2007/38, 2007/44 மற்றும் 2009/5 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணைகள் 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(இத்தீர்மானங்கள் 2016.12.02 மற்றும் 2017.01.06ஆம் திகதிகளிலான முறையே 1995/37 மற்றும் 2000/86 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணைகள் 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(இக்கட்டளைகள் 2016.12.27, 2017.01.03 மற்றும் 2017.01.25ஆம் திகதிகளிலான முறையே 1999/23, 2000/8 மற்றும் 2003/22 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணைகள் 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iv) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இக்கட்டளை 2016.11.11ஆம் திகதிய 1992/51ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணை 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம்
(இச்சட்டமூலம் 2017.04.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 

2017 மே 04 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 14 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 15 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2017 மே 05 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom