இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஏப்ரல் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-04-04

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 (ஏ) உறுப்புரைகளின் பிரகாரம், 2016 ஒக்டோபர் 01 முதல் 2016 திசெம்பர் 31 வரையிலான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்தில்  ஆங்கிலம் மற்றும் மொழியியல் துறையை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 01 ஆம் திகதிய 1995/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) (ஆ)  பிரிவின் கீழ்  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் “தொழில் நுட்பம்சார் கற்கை நெறிகள் நிறுவகத்தை” பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக ஏற்று அங்கீகரித்து 1988 திசெம்பர் 15 ஆம் திகதிய 536/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை இல்லாதொழித்து, 2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1)  ஆம் பிரிவின்       கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் தாதியியல் பீடம் ஆகியவற்றை  நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில்  உற்பத்தி மற்றும் கைத்தொழில் பொறியியல் துறையை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) (ஆ) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, இலங்கை கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமித்து  2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்  உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, “அக்குவைனஸ் கொலேஜ் ஒவ் ஹயர் ஸ்டடிஸ்” நிறுவனத்தினைப்  பட்டமளிக்கும் நிறுவனமாக ஏற்றங்கீகரித்து   2005 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 1413/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி  ஆக்கப்பட்டு,   2017 பெப்புருவரி 07 ஆம் திகதிய 2005/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  களனிப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பீடத்தில்  ஆங்கில மொழிக் கற்பித்தல்  துறையை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2017 பெப்புருவரி 08 ஆம் திகதிய 2005/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(ix) 2014 ஆம் ஆண்டுக்கான சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் (கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவனம்)
(x) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனம்
(xi) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகம்
(xii) 2014 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்
(xiii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-

(xiv) 2016 நவெம்பர் 21 ஆம் திகதிய 1994/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xv) 2016 திசெம்பர் 09 ஆம் திகதிய 1996/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 
(xvi) 2016 திசெம்பர் 20 ஆம் திகதிய 1998/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xvii) 2017 சனவரி 06 ஆம் திகதிய 2000/85 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 
(xviii) 2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 
(xix) 2017 பெப்புருவரி 16 ஆம் திகதிய 2006/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 
(xx) 2017 பெப்புருவரி 23 ஆம் திகதிய 2007/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xxi) 2017 மார்ச் 07 ஆம் திகதிய 2009/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின்  5 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்-

(xxii) 2017 சனவரி 27 ஆம் திகதிய 2003/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xxiii) 2017 பெப்புருவரி 26 ஆம் திகதிய 2007/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானங்கள்-

(xxiv) 2016  திசெம்பர் 02 ஆம் திகதிய 1995/37  ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xxv) 2017 சனவரி 06 ஆம் திகதிய 2000/86  ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(xxvi) சிறைச்சாலைகளில் நிலவுகின்ற இடநெரிசல் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சம்பந்தப்பட்ட நீதிமுறை மற்றும் சட்ட ரீதியான காரணங்களை ஆராய்ந்து பார்த்தல் பற்றிய செயலணியின் முதலாம் அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ பிமல் ரத்நாயக்க                   -           இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண                   
(iii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே           -           இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ சிறினால் டி மெல்                   
(v) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன                -         இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ துஷார இந்துனில் அமரசேன     -         இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ மயில்வாகனம் திலகராஜா         -         இரண்டு மனுக்கள்
(viii) கௌரவ பிரசன்ன ரணதுங்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

தளதா மாளிகைக்கு முன்னாலுள்ள புதிய பாதையை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

முல்லைதீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்புலவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஆதரவற்ற கலைஞர்களின் பொதுநலத்திற்காக திட்டமொன்றை வகுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஏப்ரல் 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom