இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 மார்ச் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-03-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : கௌரவ விமல் வீரவங்ச அவர்களினால் எழுப்பப்பட்ட விடயம் தொடர்பான தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை

(ii) 2014 ஆம் ஆண்டுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிடெட்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ திலக் மாரபன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ வசந்த அலுவிஹாரே                           -          இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                        -           ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ மாவை சோ. சேனாதிராசா                   
(iv) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                   
(v) கௌரவ ஹெக்டர் அப்புஹாமி                   
(vi) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மூன்று வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(iii) கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

மன்னார் மாவட்டத்திலுள்ள மடு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள காணிப் பிரச்சினை தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம்

விவாதிக்கப்பட்டதுடன், எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1922 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 09ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom